இந்தியா

ஹிமாசலப் பிரதேசத்தில் புதிய ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பதவியேற்பு

DIN


ஹிமாசலப் பிரதேசத்தின் புதிய ஆளுநராக, முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 
சிம்லாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.ராமசுப்ரமணியன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் ஹிமாசல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர், பஞ்சாப் மாநில ஆளுநர் வி.பி.சிங் பட்னோர், மாநில சட்டப்பேரவை தலைவர் டாக்டர் ராஜீவ் பிண்டல், முன்னாள் முதல்வர்கள் வீரபத்ர சிங், பிரேம்குமார் துமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான கல்ராஜ் மிஸ்ரா கடந்த நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை அமைச்சராக இருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT