இந்தியா

ரூ.1,500 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கு: ஹரியாணா முன்னாள் முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக (2004-07) பதவி வகித்த போது, முதன்மை தொழில்நகரம் அமைப்பது தொடர்பாக 912 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அறிவித்தது.

DIN

ரூ.1,500 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பி.எஸ்.ஹூடாவிடம் அமலாக்கத்துறை சண்டீகரில் வியாழக்கிழமை 4 மணிநேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தியது. 

முன்னதாக, ஹிரயாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக (2004-07) பதவி வகித்த போது, முதன்மை தொழில்நகரம் அமைப்பது தொடர்பாக 912 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உத்தரவிட்டது. இதனடிப்படையில் தனிநபர்களிடம் இருந்து 400 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனங்களால் ரூ.100 கோடிக்கு பெறப்பட்டது. 

ஆனால், இந்த திட்டத்தை அரசு திடீரென கைவிட்டது. இதனால் நிலத்தை இழந்த விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் மாநில அரசை கடுமையாக குற்றம்சாட்டினர். மேலும் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சிபிஐ வசம் 2015-ல் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

அப்போதைய சந்தை மதிப்பின் படி ஒரு ஏக்கர் நிலம் ரூ.4 கோடியாக இருந்தது. இதில் அரசின் நிலைப்பாடு தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மேலும் விவசாயிகள் உட்பட நில உரிமையாளர்கள் ஏமாற்றப்பட்டு ரூ.1,500 கோடி ஊழல் நடந்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஹூடா, முதன்மைச் செயலர் உள்ளிட்ட 34 பேர் மீது சிபிஐ கடந்த செப்டம்பர் 2016-ல் வழக்கு தொடர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக சரிவு

மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT