இந்தியா

கார்கில் போரின் 20-ஆவது ஆண்டு வெற்றி தினம்: தில்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

கார்கில் போர் வெற்றியின் 20-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு தில்லியில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். 

DIN

கார்கில் போர் வெற்றியின் 20-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு தில்லியில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். 

கடந்த 1999-இல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கார்கில் போர் வெற்றியின் 20-ஆவது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதை முன்னிட்டு தில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். இதேபோல, ஜம்மு-காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் திராஸ் நகரில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில், ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகிய மூவரும் அஞ்சலி செலுத்தினர். 

முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT