இந்தியா

மகாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 700 பயணிகளும் பத்திரமாக மீட்பு! பதற வைக்கும் புகைப்படங்கள்

மும்பையில் கடும் வெள்ளத்தில், தண்டவாளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மகாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

PTI


மும்பை: மும்பையில் கடும் வெள்ளத்தில், தண்டவாளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மகாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரவு முழுவதும் பெய்த கன மழை காரணமாக தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால், வாங்கனி அருகே மகாலஷ்மி விரைவு ரயில் நள்ளிரவு 3 மணியளவில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.

ரயிலில் 700 பயணிகள் வரை இருந்ததால், அதில் இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

அவர்களுடன் விமானப் படை, கடற்படை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களும் இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையால் 9 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

படகுகளை ரயில்களுக்கு அருகே கொண்டு சென்று, ஒவ்வொரு பயணிகளாக படகில் ஏற்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்து, பேருந்து மற்றும் சிறிய டெம்போக்களில் அவர்களை ஏற்றி அனுப்பி வருகிறார்கள்.

ரயிலில் இருக்கும் பயணிகள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், பாதுகாப்பாக மீட்கும் பணிகள் நடந்து வருவதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்தரி ஃபட்னவிஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT