இந்தியா

நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம் 

நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் மசோதா மக்களவையில் புதனன்று நிறைவேற்றபட்டது.

DIN

புது தில்லி: நாடு முழுவதும் நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயத்தை அமைக்கும் மசோதா மக்களவையில் புதனன்று நிறைவேற்றபட்டது.

இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு நதிநீர் தொடர்பான எல்லா விவகாரங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கவனிக்கும் வகையில், ஜல்சக்தி என்னும் புதிய துறை  உருவாக்கப்பட்டது. கஜேந்திர சிங் ஷெகாவத் அதற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து நாடு முழுவதும் வெவேறு மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க தனித்தனியாக தீர்பாயங்கள் அமைக்கப்படுவதற்கு பதிலாக ஒரே தீர்ப்பாயம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு வழிசெய்யும் மசோதாவை, ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதன் மீதான விவாதத்தின்போது இத்தகைய தீர்ப்பாயம் அமைந்தால், தமிழகம் போராடிப் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் நிலை என்னாகும் என்று மத்திய சென்னை எம்.பியான தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்து கஜேந்திர சிங், 'நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும்; நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும்' என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீண்ட விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT