இந்தியா

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமித் ஷா: அதிகாரிகளுடன் ஆலோசனை

PTI

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா இன்று உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வந்து பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

நார்த் பிளாக் அலுவலகத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்துக்கு வந்த அமித் ஷாவை, உள்துறை அமைச்சகச் செயலர் ராஜீவ் கௌபா மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

உள்துறை அமைச்சகம் கவனிக்க வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து முக்கிய உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

உள்துறை இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஜி.கே. ரெட்டி மற்றும் நித்யானந்தா ராய் ஆகியோரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர் பொறுப்பேற்றிருப்பதன் மூலம், முக்கிய கொள்கைகளை எடுப்பது மற்றும் முடிவெடுப்பதில் சில பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT