இந்தியா

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ பதவியில் இருந்து ராஜிநாமா 

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராதாகிருஷ்ண விகே படேல்   தனது எம்.எல்.ஏ பதவியினை ராஜிநாமா செய்துள்ளார்.

IANS

மும்பை: மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராதாகிருஷ்ண விகே படேல்   தனது எம்.எல்.ஏ பதவியினை ராஜிநாமா செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர் ராதாகிருஷ்ண விகே படேல். அஹமது நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் முன்னாள் எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் ராதாகிருஷ்ண விகே படேல் தனது எம்.எல்.ஏ பதவியினை செவ்வாயன்று ராஜிநாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜிநாமாவை சபாநாயகர் ஹரிபாபு பகாதேவுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் அவர் விரைவில் பாஜகவில் சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாக அவரது மகனான சுஜய் விகே படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போல் மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் பாஜகவில் சேர தயாராக உள்ளனர் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாத மத்தியில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது காங்கிரசுக்கு மேலும் சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT