இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்ற மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று மாலத்தீவுகள் சென்றுள்ளார்.
மாலே: நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று மாலத்தீவுகள் சென்றுள்ளார்.
நேற்று புது தில்லியில் இருந்து கேரளா வந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று குருவாயூர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பிறகு அங்கிருந்து கிளம்பி மாலத்தீவுகள் சென்றடைந்த மோடி, மாலத்தீவு நாடாளுமன்றமான மஜ்லிஸில் உரை நிகழ்த்த உள்ளார்.
பிரதமர் மோடி, மாலத்தீவுகள் அதிபர் இப்ராஹிம் மொஹம்மது சொலிஹ்ஹுடன் இணைந்து இரண்டு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார்.
பிறகு ஜூன் 9ம் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு மோடி இலங்கை செல்லவிருக்கிறார்.