இந்தியா

கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்

DIN


நிகழாண்டுக்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி விட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நிகழாண்டில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் குழுக்களில் முதல் குழுவின் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:
லிபுலேக் பாதை வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை கடந்த 1981-ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. இருப்பினும் அதற்கடுத்த ஆண்டுகளில்தான் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் தற்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டது.
இந்த யாத்திரை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு, பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகள் அளிக்கும் ஆதரவும், ஒத்துழைப்பும்தான் காரணமாகும். குறிப்பாக, உத்தரகண்ட், சிக்கிம், தில்லி மாநில அரசுகள், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு மிகப்பெரும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கின்றன.
அதேபோல், சீன மக்கள் குடியரசும் தமது ஆதரவை அளிக்கிறது. இந்த யாத்திரையானது, சீனா-இந்தியா மக்களிடையேயான தகவல் பரிமாற்றம், அவர்களிடையேயான நட்புறவு, இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஆகியவை அதிகரிக்க செய்கிறது. சீனாவுக்கான இந்திய தூதராக நான் பணியமர்த்தப்பட்டிருந்த காலத்தில், கைலாஷ் மானசரோவருக்கு நானும் யாத்திரை சென்றுள்ளேன்.
நிகழாண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல விருப்பம் தெரிவித்து, 2,996 பேர் மனுக்கள் அளித்துள்ளனர். அதில் 2,256 பேர் ஆண்கள். 740 பேர் பெண்கள். 624 பேர் முதியோர் ஆவர். கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லும் நபர்கள், பாதுகாப்புத் தொடர்பான விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT