இந்தியா

ஹிமாசல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்

DIN


தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தெலங்கானா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த ராகவேந்திர சிங் சௌஹான், அதே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தெலங்கானா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்ட ராகவேந்திர சிங் சௌஹான், தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய வெ. இராமசுப்பிரமணியன், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 24 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 12 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 13 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 9 நீதிபதிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT