இந்தியா

பிகாரில் 118 குழந்தைகளின் மரணத்திற்கு காரணம லிச்சிப் பழங்களா?: ஆராய அமைச்சர் உத்தரவு 

பிகாரில் மூளை அழற்சி நோயின் காரணமாக 118 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

IANS

பாட்னா: பிகாரில் மூளை அழற்சி நோயின் காரணமாக 118 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பிகாரின் முஸாபார்நகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் 118 குழந்தைகள் ஏ.இ.எஸ் எனப்படும் மூளை அழற்சி நோயின் காரணமாக மரணமடைந்துள்ளார். இதற்கு அப்பகுதியில் அதிகமாக வி ளையக் கூடிய லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணம் என்று ஒரு கருத்து கூறப்பட்டது. 

இந்தியாவிலேயே பிகாரின் முஸாபார்நகர் மாவட்டம்தான் "லிச்சிப் பழங்களின் மையம்" என்று அழைக்கப்படுகிறது. அத்தனை அதிகமான விளைச்சல் இங்கிருந்து கிடைக்கிறது. பொதுவாக இந்தப் பழங்களின் அறுவடை சமயத்தில்தான் ஏ.இ.எஸ் எனப்படும் மூளை அழற்சி நோயின் பரவல் அதிகமாக் காணப்படுகிறது ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்தப் பழங்களை உட்கொண்டதுதான் குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் பிகாரில் மூளை அழற்சி நோயின் காரணமாக 118 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரேம்குமார் வெள்ளியன்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு லிச்சிப் பழங்களை உண்டதுதான் காரணமா என்று ஆராயுமாறு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.

இதற்காக விவசாய விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

சட்டவிரோத வாக்காளர் அட்டை விநியோகம்: காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு!

நீக்கப்பட்டவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவு!

2032-க்குள், ரூ. 75,000 கோடி முதலீடு இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல்!

SCROLL FOR NEXT