இந்தியா

வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஊழியர்களின் பணிகளை மறுஆய்வு செய்ய வேண்டும்: மத்திய அரசு

DIN


வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களது பணியாளர்களின் பணிகள் தொடர்பான பதிவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊழல்வாதிகள், திறமையற்ற நபர்களை கண்டறிந்து களையெடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பணியாளர் நல அமைச்சகம் அனைத்து துறை செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
அனைத்து அமைச்சகங்கள்/ துறைகள் தங்கள்  ஊழியர்களின் பணி தொடர்பான பதிவுகளை அவ்வப்போது மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகமும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
ஓர் அரசு பணியாளர் பொதுநலனுக்காக ஓய்வு பெறுவதற்கான கருத்தை உருவாக்கி பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை மூலம் அதனை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உறுதி செய்ய வேண்டும்.
2019 ஜூலை 15 முதல் ஒவ்வொரு மாதமும் 15-ஆவது நாளை கணக்கில் கொண்டு அனைத்து அரசு நிறுவனங்களும்  பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய பணியாளர் நல  அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய குடிமைப்பணி சேவை (ஓய்வூதியம்) 1972 சட்டம்,  அடிப்படை விதிகள் 56 (ஜே), (ஐ) மற்றும் விதி 48 ஆகியவை,  வங்கிகள், பொதுத் துறை  நிறுவனங்கள், மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணிப் பதிவுகளை மறுஆய்வு செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது.
இந்த சட்ட விதிகள்,  ஓர் அரசு பணியாளரின் நேர்மை சந்தேகத்துக்கிடமாகும்போது பொது நலன் கருதி அவரை  வேலையிலிருந்து விடுவிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. அதேபோன்று வேலைக்கு தகுதியற்ற திறமையற்ற நபராக கண்டறியப்படும் அரசு பணியாளரை நீக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.  
இதே சட்ட விதிகளைப் பயன்படுத்தி, மத்திய அரசு அண்மையில் பொது நலன் கருதி இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மத்திய கலால் வரி)  அதிகாரிகள் 15 பேருக்கு ஓய்வளித்தது. அதேபோன்று இம்மாதத் தொடக்கத்தில் இந்திய வருவாய் பணி (வருமான வரி) அதிகாரிகள் 12 பேரை பணி நீக்கம்  செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT