இந்தியா

சிட்னி விமான நிலையக் கடையில் திருடிய ஏர் இந்தியா அதிகாரி சஸ்பெண்ட்; என்ன திருடினார் தெரியுமா?

DIN

ஆஸ்திரேலியாவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் மண்டல இயக்குநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஏர் இந்தியாவின் கிழக்கு பகுதி மண்டல இயக்குநர் ரோஹித் பாசின். இவர், ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு கடந்த 22 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏஐ301 விமானத்தை இயக்குவதற்கு முன்பாக அங்குள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்காடியில் இருந்த  விலையுயர்ந்த பர்ஸை ஒன்றை பாசின் திருடியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஏர் இந்தியா நிறுவனத்தின் வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அவரின் அடையாள அட்டையையும் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஏர் இந்தியா எப்போதுமே அதிக முக்கியத்துவம் தந்து செயல்பட்டு வருகிறது. எனவே, முறையற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது எவ்விதத்திலும் கருணை காட்ட கூடாது என்பதே ஏர் இந்தியாவின் கொள்கை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT