இந்தியா

பாகிஸ்தானை எதிர்கொள்ள முழு அளவில் தயார்: இந்திய விமானப்படை

DIN


பாகிஸ்தானில் இருந்து எவ்வித அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, கடந்த மாதம் 26-ஆம் தேதி அதிகாலையில் இந்திய விமானப்படை, பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதையடுத்து, இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் விமானப்படையின் முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதன்பிறகு இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாள்களாக தொடர்ந்து அத்துமீறி ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்திய விமானப் படை சார்பில் வியாழக்கிழமை ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்திய விமானப் படை முழு அளவில் தயாராக உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து எவ்வித அச்சுறுத்தல் வந்தாலும் அது முழுமையாக முறியடிக்கப்படும். பாகிஸ்தான் விமானப் படை நமது எல்லையில் அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என 24 மணி நேரமும் காண்காணிக்கப்படுகிறது. அப்படி ஏதும் நிகழ்ந்தால் அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க நமது போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. பாகிஸ்தானுடனான அனைத்து எல்லைகளும், முக்கியமாக நமது மேற்குப்பகுதி எல்லை முழு உஷார் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT