இந்தியா

வைரக் கம்மலை திருடிய எலி: சிவராத்திரி என்பதால் இப்படி நினைத்துக் கொண்டாராம் உரிமையாளர்

பிகாரில் இருக்கும் எலிகளின் புகழ் உலகமெங்கும் பரவியிருக்கும் நிலையில் தற்போது கிடைத்திருப்பது ஒரு சிறிய செய்தி தான்.

ENS

பிகாரில் இருக்கும் எலிகளின் புகழ் உலகமெங்கும் பரவியிருக்கும் நிலையில் தற்போது கிடைத்திருப்பது ஒரு சிறிய செய்தி தான்.

சரி என்னவென்று பார்ப்போம்.

பிகாரில் நகைக் கடை வைத்திருக்கும் தீரஜ்குமார், தனது கடையில் இருந்த வைரக் கம்மல் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிசிடிவி கேமராவைப் பார்த்த போது கடந்த வாரம் சிவராத்திரி  அன்று கடையை மூடிய பிறகு ஒரு எலி வந்து, வைரக் கம்மல் இருக்கும் மஞ்சள் நிறப் பையை இழுத்துச் சென்றது தெரிய வந்தது.

கடையில் வேலை செய்பவர்கள் கடையை ஜல்லடைப் போட்டுத் தேடியும் எலியும் கிடைக்கவில்லை. கம்மலும் கிடைக்கவில்லை.

இதனால் மனம் நொந்துவிடவில்லை தீரஜ்குமார். அன்றைய தினம் சிவராத்திரி என்பதால், மாதா பார்வதி தேவிக்கு, விநாயகரின் வாகனமான எலி பரிசளிக்கவே கம்மலை எடுத்துச் சென்றிருக்கும் என்று மனதைதேற்றிக் கொண்டார்.

பார்வதிக்கு பரிசளிக்க எனது கடை நகையைத் தேர்வு செய்ததற்காக நான் மகிழ்கிறேன் என்கிறார் சிரித்தபடி தீரஜ்குமார்.

ஒருவேளை அந்த வைரக் கம்மல் கிடைத்து விட்டால் கூட அதனை கேதார்நாத் சிவன்  கோயிலுக்கு காணிக்கையாக செலுத்து விடுவேன் என்றும் கூறுகிறார் பெரிய மனதுடன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT