இந்தியா

தேர்தலில் போட்டியில்லை என்றாலும் மத்தியில் பிரதமர், அமைச்சர் ஆகலாம்: மாயாவதி

DIN


மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் மத்தியில் பிரதமர் அல்லது அமைச்சர் ஆகலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜவாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, "வரும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை" என்று அறிவித்தார். இந்த சந்திப்பில், "நாடாளுமன்றத்துக்கு நான் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், கட்சியின் எம்.பி. ஒருவரை பதவி விலகச் செய்து விட்டு, அந்தத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆவேன்" என்றும் தெரிவித்திருந்தார்.

பின்னர் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிடுகையில், 

"1995-இல் முதல்வரானபோது நான் உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினரும் கிடையாது, சட்டமேலவை உறுப்பினரும் கிடையாது. அதுபோலவே, பிரதமர் அல்லது அமைச்சர் பதவியை வகித்துக்கொண்டே 6 மாதங்களில் உறுப்பினராகலாம். அதற்கு சட்டத்திலும் இடம் உண்டு. மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வருத்தமடையவேண்டாம்" என்றார். 

நாட்டின் பிரதமர் ஆவதற்கு தயக்கம் இல்லை என்பதை மாயாவதி கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், தற்போதைய அரசியல் சூழலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யாத நிலையில் மாயாவதியின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT