இந்தியா

பிகாரில் காங்கிரஸ் - ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீடு நிறைவு 

DIN

பாட்னா: பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையேயான மகா கூட்டணியில் தொகுதிப்  பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

அதேசமயம் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதாவின் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே மகா கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. காங்கிரஸ் முதலில் 11 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் 8  தொகுதிகள்தான் தர முடியும் என லாலு கட்சி கூறியது. அதிக தொகுதிகள் வேண்டும் என்றால் தனியாக போட்டியிடுங்கள் என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதது என்று தகவல்கள் பரவியது.

இந்நிலையில் பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையேயான மகா கூட்டணியில் தொகுதிப்  பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

இறுதி செய்யப்பட்ட முடிவின்படி 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து பிரிந்த உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டீரிய லோக் சாம்தா கட்சிக்கு 5 தொகுதிகள்  வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT