இந்தியா

இலக்கை விஞ்சியது பங்கு விலக்கல்: அரசுக்கு ரூ.85,000 கோடி வருவாய்

DIN


நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட நடப்பு நிதியாண்டில் கூடுதல் பங்கு விலக்கல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வசமுள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதுதான் பங்கு விலக்கல் நடவடிக்கையாகும். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.80,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நடப்பு நிதியாண்டில் ரூ.80,000 கோடி அளவுக்கு பங்கு விலக்கல் இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி மத்திய அரசு  பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ.85,000 கோடி பெறப்பட்டுள்ளது.  இதன் மூலம் இலக்கைவிட அதிமாக பங்கு விலக்கல் நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ரூ.90,000 கோடி பங்கு விலக்கல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் இடிஎஃப் வெளியீடு மூலம் ரூ.9,500 கோடி கிடைத்துள்ளது. ஊரக மின்வசதியாக்கல் நிறுவனம் மற்றும்   மின்சார வசதிக்கான நிதிக் கழகம் ஆகியவற்றின் இணைப்பு மூலம் ரூ.14,500 கோடியும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT