இந்தியா

100 நாளை வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படுமா? தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கோரிக்கை

DIN


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் ஊதியத் தொகையை உயர்த்திட மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதி கோரியுள்ளது. 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலில், 2019-20 நிதியாண்டில் இந்த திட்டத்துக்காக ரூ. 60,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது 2018-19 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட தொகையை (ரூ. 55,000 கோடி) காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். இந்த ஊதிய உயர்வு புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்படுகிறது. 

அதேசமயம், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், இந்த ஊதிய உயர்வை அமல்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். எனினும், இந்த ஊதிய உயர்வு தற்போதைய ஊதியத்தை காட்டிலும் 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT