இந்தியா

தேர்தல் முடியும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும்

DIN


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் நீடிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் மிகுந்த சூழல் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை இந்த சூழல் நீடிக்கும். தேர்தலுக்கு முன்பாக, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கும். இந்தியா தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பதற்கு பாகிஸ்தான் எந்நேரமும் தயாராக உள்ளது என்று கூறினார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். அதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது விமானப் படை மூலமாக இந்தியா தாக்குதல் நடத்தியது. 
அதையடுத்து, இந்தியாவின் மிக்-21 விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. பாலாகோட் பதிலடி தாக்குதலுக்கு பின்பு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 125 முறைக்கும் மேல் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 
இத்தகைய சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT