இந்தியா

பாஜகவும், காங்கிரஸும் ஒரு பறவையின் இரு இறக்கைகள்: மாயாவதி

DIN

பாஜகவும், காங்கிரஸும் ஒரு பறவையின் இரு இறக்கைகள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புதன்கிழமை விமர்சித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவதுச

ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை விமர்சிக்கிறது, அது உண்மைதான். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் தரும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே வாக்குறுதிகள் என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. அதிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒரு பறவையின் இரு இறக்கைகள் போன்றவை. குறிப்பாக ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள்  உள்ளிட்ட அனைவரின் நம்பிக்கையை குலைப்பதில் இவ்விரு கட்சிகளும் ஒரு பறவையின் இரு இறக்கைகள் தான் என்று தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல், வாக்குறுதி அளித்தார்.

அதற்கு, பிரதமர் மோடியின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரூ. 1.068 லட்சம் தொகையின் 3-ல் 2 பங்கு தொகையை மட்டுமே வழங்குவதாக ராகுல் உறுதியளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்திருந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT