தேநீர் கோப்பையில் 'நானும் சவ்கிதார்': அவசரமாக வாபஸ் பெற்ற ரயில்வே
ரயில்வே பயணத்தின் போது வழங்கப்படும் தேநீர் கோப்பையில் 'நானும் சவ்கிதார்' விளமபரம் இடமபெற்றிருந்ததைத் தொடர்ந்து அவை ரயில்வேயால் அவசரமாக வாபஸ் பெறப்பட்டன.
புது தில்லி: ரயில்வே பயணத்தின் போது வழங்கப்படும் தேநீர் கோப்பையில் 'நானும் சவ்கிதார்' விளமபரம் இடமபெற்றிருந்ததைத் தொடர்ந்து அவை ரயில்வேயால் அவசரமாக வாபஸ் பெறப்பட்டன.
புதுதில்லியில் இருந்து, உத்தராகண்ட் மாநிலம், காத்கோடம் நகருக்கு காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு தேநீர் மற்றும் சூப் வழங்க பயன்படுத்தப்பட்ட காகிதக் கோப்பையில், பிரதமர் மோடியின் சமீபத்திய தேர்தல் முழக்கமான "நானும் சவ்த்தார் (காவலாளி)" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.
இதனால் ரயில்வே துறைசார்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்படுவதாக, காத்கோடகம் சதாப்தி ரயிலில் வழங்கப்பட்டது என்ற வாசகத்துடன் அந்த கோப்பையை புகைப்படம் எடுத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.இது வைரலாகப் பரவியது
Advertisement
Advertisement
இதையடுத்து ரயில்வேதுறை அதிகாரிகளின் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.அதில் குறிப்பிட்ட கோப்பைகள் 'சங்கல்ப்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன என்று தெரிய வந்தது. உடனடியாக அனைத்து காகித கோப்பைகளையும் ரயில்வே துறை வாபஸ் பெற்றது. அதேசமயம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளதாக செய்திக வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.