modi address nation 
இந்தியா

மிஷன் சக்தி தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையில் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையில் (மிஷன் சக்தி) இந்தியா வெற்றி அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது தேர்தல் விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN


புது தில்லி: செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையில் (மிஷன் சக்தி) இந்தியா வெற்றி அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது தேர்தல் விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மோடியின் உரையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் எந்த பேச்சும் அமையவில்லை என்றும், தேர்தல் குறித்தோ, வாக்காளர்களுக்கு எந்த அறிவிப்புமோ இடம்பெறாததால் இது தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி அடைந்ததாக, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவர் உரையாற்றியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவரது உரையை ஆய்வு செய்வதற்கு தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு வியாழக்கிழமை இரண்டு முறை கூடி விவாதித்தது. அப்போது, அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்ட காட்சி மற்றும் ஒலிப்பதிவுகளை அந்தக் குழு ஆய்வு செய்தது. இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT