இந்தியா

இலங்கையில் 2 இந்தியர்கள் கைது

DIN


அதிகாரப்பூர்வ நுழைவுஇசைவு (விசா) இன்றி, இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் இருவரை அந்நாட்டுக் காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
இது தொடர்பாகக் காவல் துறையினர் கூறுகையில், இலங்கையின் ராஜகிரியா பகுதியில் வசித்துவந்த இந்தியர்கள் இருவர், முறையான நுழைவுஇசைவு வைத்திருக்காத காரணத்தால், வெளிகடா பகுதி காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். அப்பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்தனர்.
இலங்கையில் தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டதையடுத்து, நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
முறையான நுழைவுஇசைவு இல்லாத குற்றத்துக்காக, ஒரு இந்தியர் உள்பட 13 வெளிநாட்டினர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT