முகப்பு
இந்தியா

ஃபானி புயலால் சனிக்கிழமை வரை 223 விரைவு ரயில்கள் ரத்து

ஒடிஸாவில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஃபானி புயலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 223 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:


புது தில்லி: ஒடிஸாவில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஃபானி புயலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 223 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா முதல் சென்னை வரையில், கடலோர மாவட்டங்களைக் கடந்து செல்லும் ரயில்கள் மே 4ம் தேதி வரை ரத்து செய்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

140 விரைவு ரயில்களும், 83 பயணிகள் ரயில்களும் மே 4ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 9 ரயில்கள் வேறு பாதையில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஃபானி புயல் காரணமாக ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்கள் முதல் மேற்கு வங்கம் வரை பல இடங்களில் சூறாவளிக் காற்றும், கன மழையும் பெய்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.