முகப்பு
இந்தியா

ஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு

வங்கக் கடலில் உருவாகி நேற்று ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடந்த ஃபானி புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த நீட் தேர்வு அம்மாநிலத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:49 AM
ஒடிஸாவின் புரி நகரில் பானி புயலால் விழுந்த மரங்கள் மற்றும் சேதமடைந்த கட்டடங்கள்.
பகிர்:


புது தில்லி: வங்கக் கடலில் உருவாகி நேற்று ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடந்த ஃபானி புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த நீட் தேர்வு அம்மாநிலத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஒடிஸாவில் தற்போது மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் நடந்து வருவதால் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மறு தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.