இந்தியா

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி: மே 21-ஆம் தேதி கூடுகிறதா எதிர்க்கட்சிகள் கூட்டம்? 

DIN


தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மே 21-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்துவது குறித்து சந்திரபாபு நாயுடு மற்றும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மேற்கு வங்கத்துக்கு புறப்படுவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று (புதன்கிழமை) தில்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மே 21-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த இருவரும் ஏகதேசம் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு இரண்டு தினங்களுக்கு முன் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது விவிபேட் விவகாரம், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு சதவீதம் உள்ளிட்ட விவகாரம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  

இந்த சந்திப்பைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சந்திரபாபு நாயுடு மேற்கு வங்கம் செல்கிறார். மேற்கு வங்கத்தில் அவர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார். 

முன்னதாக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே ஸ்டாலின் உட்பட இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT