இந்தியா

வங்கிக் கடன் மோசடி: அமலாக்கத் துறை முன் சந்தா கோச்சார் லிதொடர்ந்து 2-ஆவது நாளாக ஆஜர்

DIN


வங்கிக் கடன் மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் அமலாக்கத் துறை முன் தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.
முன்னதாக, வங்கிக் கடன் மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 8 மணி நேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விடியோகான் நிறுவனத்துடன் கோச்சார் குடும்பத்துக்கு உள்ள தனிப்பட்ட மற்றும் அலுவல் ரீதியிலான உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சாரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அவர்கள் இருவரிடமும் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அவர்களிடம் கூடுதலாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, அவர்கள் இருவரையும் மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருவரும் செவ்வாய்க்கிழமை காலை 11. 30 மணிக்கு ஆஜராகினர்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது சந்தா கோச்சார், விடியோகான் நிறுவனத்துக்கு ரூ. 1, 875 கோடி கடன் வழங்கப்பட்டது. அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நியூபவர் ரின்யூவபிள்ஸ் நிறுவனத்தில், விடியோகான் குழுமம் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விடியோகான் நிறுவனத்துக்கு கடன் அளித்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
மேலும், சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், உறவினர் ராஜீவ் கோச்சார், விடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தா கோச்சாரின் வீடு மற்றும் அவரது உறவினரின் வீடு உள்ளிட்ட இடங்களில்  கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை  நடத்தினர்.
இந்த வழக்கில், சந்தா கோச்சாரின் உறவினர் ராஜீவ் கோச்சாரிடம், அமலாக்கத் துறை பல முறை விசாரணை நடத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT