இந்தியா

அஸ்ஸாம்: புயல்-மின்னலுக்கு 23 பேர் பலி

DIN


அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட புயல், மின்னல் ஆகிய இயற்கை பேரிடர்களில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அஸ்ஸாமில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட புயல், மின்னலால், மாநிலம் முழுவதும் சுமார் 18 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோலாகாட், சிவசாகர், துப்ரி, சச்சார் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 22, 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளனர். புயலில் சிக்கி 10 பேரும், மின்னல் தாக்கி 13 பேரும் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. 
இழப்பீடு..: புயல், மின்னல் ஆகிய இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ. 4 லட்சம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் உண்டான சேதங்களைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. 
அதுமட்டுமன்றி, முழுவதும் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க சுமார் ரூ. 1 லட்சமும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க சுமார் ரூ. 5, 000 வழங்குமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT