முகப்பு
இந்தியா

பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி: சித்தராமையா

பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். 

Updated On : 18 மே, 2019 at 12:33 PM
பகிர்:

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி. அதுபோன்ற ஒரு பெண்ணிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். இவரைப் போன்ற பலபேர் பாஜக-வில் உள்ளனர். இதுபோன்றவர்களை நாம் எவ்வாறு தேச பக்தர்களாகக் கருதுவது என்று தெரிவித்தார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.