இந்தியா

மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது: நிதிஷ்குமார்

DIN

மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது என்று பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில், பிகார் மாநிலத்தில் 8 மக்களவைத் தொகுதிகளும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பாட்னா தொகுதியில் பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது. கோடைக்காலத்தில் மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களாக நடத்தியிருக்கக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார். மேலும், கோட்சே ஒரு தேச பக்தர் என பிரக்யா சிங் கூறியதற்கு கட்சி என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது அவர்களது கட்சி சார்ந்த விஷயம்; ஆனால் அத்தகைய கருத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT