FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டது பங்காளித் தகராறு: சீன தூதர் விளக்கம்

இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டது பங்காளித் தகராறு தான் என இந்தியாவுக்கான சீன தூதர் லோ சௌஹுய் தெரிவித்தார். 

Updated On : 22 மே 2019, 2:23 pm IST
பகிர்:

இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டது பங்காளித் தகராறு தான் என இந்தியாவுக்கான சீன தூதர் லோ சௌஹுய் தெரிவித்தார். 

இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைப் பகுதிகள் சந்திக்கும் இடமாக அமைந்துள்ள டோக்லாமில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே சண்டை ஏற்பட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து இரு நாடுகளின் ராணுவமும் அங்கு வீரர்களை குவிக்க ஆரம்பித்தது. மேலும் டோக்லாம் பகுதியை சீனா சொந்தம் கொண்டாட முயன்றது. இருப்பினும் இந்திய ராணுவம் அங்கு முகாமிட்டதால் பின்னர் சீன ராணுவம் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. பின்னர் சீன அதிபருடன் இந்திய பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் இப்பிரச்னை சமாதானம் ஆனாது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டது பங்காளிப் பிரச்னை போன்றது தான் என்று இந்தியாவுக்கான சீன தூதர் லோ சௌஹுய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இரு நட்பு நாடுகளுக்கு இடையே பிரச்னை வருவது இயற்கையானது தான். இது ஒரே வீட்டில் குடியிருக்கும் சகோதரர்களுக்கு இடையிலான பிரச்னை போன்றது தான். இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டதும் இதுபோன்ற பங்காளிப் பிரச்னை தான். சுமார் 2 ஆயிரம் வருடங்களுக்கும் மேலான குடும்ப வாழ்க்கையில் இதுபோன்ற சிறு பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படுவது சகஜமானது.

அதற்காக அந்த பிரச்னைகளை அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டதில்லை. இருதரப்பும் இணைந்து பேசி அதற்கு முடிவு ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் இந்தியா, சீனா இடையிலான நட்பு சுமூகமாக தொடர்கிறது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments