இந்தியா

ரயில்பாதையை மின்மயமாக்க ரூ.5,227 கோடி நிதி: ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது

DIN

 இந்தியாவில் ரயில்பாதையை மின்மயமாக்கும் பணிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.5,227 கோடி நிதி வழங்குகிறது.
இதுதொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் 3,378 கிலோ மீட்டர் தூர ரயில்வே பாதையை மின்மயமாக்கும் பணிக்கு ரூ.5,227 கோடியை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது. இதுதொடர்பான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் ஆசிய வளர்ச்சி வங்கி செய்து கொண்டுள்ளது.
இந்த நிதியுதவி, இந்திய ரயில்வே துறையை எரிபொருள் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து, மின்சார மயமாக்க உதவும். இந்தியாவில் சரக்குகள்,  பயணிகள் போக்குவரத்து விரைந்து நடைபெற உதவிகரமாக இருக்கும்.  மின்மயமாக்கல் முடிந்த சொத்துகள், இந்திய ரயில்வேயிடம் குத்தகைக்கு அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT