இந்தியா

தோற்றவர்கள் எல்லாம் தோல்வியாளர்கள் அல்ல: மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

PTI


கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

அதே சமயம், மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மம்தா பானர்ஜி கூறுகையில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிக்கும் வரை காத்திருப்போம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். ஆனால் தோல்வியடைந்தவர்கள் யாரும் தோல்வியாளர்கள் அல்ல என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 2 மணி நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதியிலும், பாஜக 19 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT