இந்தியா

தேர்தல் தோல்வி: 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முடிவு

DIN

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 90 இடங்களையே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி முன்வந்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்துவிட்டது. மேலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான அதிகாரத்தை, ராகுலுக்கு செயற்குழு வழங்கியது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை, ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றுவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT