இந்தியா

மிஸோரத்தில் பூரண மதுவிலக்கு அமல்

DIN


மிஸோரம் மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநில கலால் மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆணையர் கூறுகையில், சட்டப்பேரவையில்  மிஸோரம் பூரண மதுவிலக்கு சட்டம், 2019  மார்ச் 20-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஏப்ரல் 1-ஆம் தேதி பூரண மது விலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால்  மக்களவைத் தேர்தல் முடிவடையும் வரை, பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. கடந்த 27-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. அதனால் பூரண மதுவிலக்குக்கான அறிவிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மிஸோரமில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முந்தைய காங்கிரஸ் அரசு, மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த மிஸோ தேசிய முன்னணி அரசு,  கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி தற்போது பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT