இந்தியா

பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் பட்டியல்: வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியீடு

DIN


நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கவுள்ள விழாவுக்கு இலங்கை அதிபர், வங்கதேசம் அதிபர், பூடான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் தலைவர்கள் பங்கேற்கலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்கவுள்ள வெளிநாட்டு தலைவர்கள் பட்டியலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது. 

அதன்படி மியான்மர் அதிபர் வின் மியிந்த், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பெகோ, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, வங்கதேசம் அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறீசேனா, நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாவத், தாய்லாந்து சிறப்பு தூதர் கிரிஸடா ஆகியோர் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், பிம்ஸ்டெக் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT