இந்தியா

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 16 பேருக்கு சிறை தண்டனை

DIN


பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 16 பேருக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையை அறிவித்துள்ளது.
அவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.25,000 முதல் ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.என்.மிஸ்ரா புதன்கிழமை இந்த தீர்ப்பை வழங்கினார்.
பிகாரில் கடந்த 1990-களில் சைபாஸா கருவூலத்தில் கால்நடைத் தீவனத்துக்கான நிதி ரூ.37 கோடியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்திருந்த துணை குற்றப்பத்திரிகையில் 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார். 3 பேர் இறந்து விட்டனர்.
இந்நிலையில், சைபாஸா கருவூலத்தின் முன்னாள் அலுவலர்கள், கடந்த 2013-இல் ஊழல் அம்பலமானபோது பணியில் இருந்த அலுவலர்கள் அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-இல், இதே ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் உள்ளிட்ட 44 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, வேறு 3 கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவற்றில் ஒரு வழக்கில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கை எதிர்கொண்டுள்ள அவர், தற்போது ராஞ்சியில் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT