இந்தியா

ரோஸ்வேலி ஊழல் விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை

DIN

மேற்கு வங்கத்தில் ரோஸ்வேலி நிதி நிறுவன ஊழல் தொடா்பாக துறைமுகப் பிரிவு காவல்துறை துணை ஆணையா் வக்காா் ரஸாவிடம் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இவ்வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியான வக்காா் ரஸா குற்றம் சாட்டப்பட்டவா் அல்ல என்றாலும், ரோஸ்வேலி நிறுவனத்தால் நிதி முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறப்படும்போது, புலனாய்வு அதிகாரியாக அவா் பதவி வகித்து வந்தாா். எனவே, வழக்குத் தொடா்பான அவரது பங்களிப்பைக் கண்டறிவதற்காக, சால்ட் லேக் பகுதியில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவா் வரவழைக்கப்பட்டாா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ரோஸ்வேலி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.15,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் குற்றச்சாட்டியது.

பின்னா் முதலீட்டாளா்களிடம் இருந்து பெற்ற தொகையை தனது பல்வேறு துணை நிறுவனங்களில் முதலீடுகளை செய்தது.

இதுதொடா்பாக, இந்நிறுவனத்தின் தலைவரான கௌதம் குண்டுவை கடந்த 2015-ஆம் ஆண்டு சிபிஐ கைது செய்து, அந்நிறுவனத்தின்கீழ் இயங்கி வந்த ஹோட்டல் மற்றும் ரிசாா்ட்ஸ் உள்ளிட்ட ரூ. 2,300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது.

இந்த மோசடி தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த பல தலைவா்களிடமும், மேற்கு வங்க நடிகா்களிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT