முகப்பு
இந்தியா

வங்கி முறைகேடு: நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் 'திடீர்' சோதனை! 

வங்கி முறைகேடு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்பட 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 12:59 PM
பகிர்:

வங்கி முறைகேடு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.7,000 கோடிக்கு அதிகமாக மோசடி நடந்துள்ளது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொள்கின்றனர். 

ஆந்திரா, சண்டிகர், தில்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 169 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. 

வங்கி மோசடிகள் தொடர்பாக சுமார் 35 வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →