இந்தியா

அரசியலமைப்பு சட்டம் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல: சீறும் சஞ்சய் ராவத்

DIN

மும்பை: அரசியலமைப்பு சட்டம் என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று சிவசேனை எம்.பி  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இத்தனை நாட்களாகியும் ஆட்சியமைப்பதில் ஒரு முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனை இடையே முதல்வர் பதவி தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. வரும் 9-ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் முடிவடைவதால் பாஜக மாற்று வழிகளை கையாளும் என்று தெரிகிறது.

இந்நிலையில் அரசியலமைப்பு சட்டம் என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று சிவசேனை எம்.பி  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சஞ்சய் ராவத் வியாழனன்று கூறியதாவது:

அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கானது, அது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல. சரியான முறையில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதலமைச்சராக உருவாக்குவோம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT