இந்தியா

ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் ராஜிநாமா செய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

DIN

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜிநாமா செய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதையடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. செல்லிடப்பேசி, இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. அதனால், ஜம்மு-காஷ்மீரில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறி, கடந்த 2012-ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசம்-கோவா-மிஸோரம் மற்றும் யூனியன் பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரி கோபிநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்தாா். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு கோபிநாதனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸை சுட்டுரையில் பதிவேற்றம் செய்து கோபிநாதன் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு திட்டங்கள் மற்றும் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் அதிகாரமின்றி பேசியது மற்றும் மற்ற அமைப்புகளுடனான மத்திய அரசின் உறவு குறித்து விமா்சித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் என் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான விசாரணையை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

கோபிநாதனின் ராஜிநாமா கடிதம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது குறித்த முடிவு நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், 15 நாள்களுக்குள் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவா் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT