இந்தியா

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி13-ஆம் தேதி பிரேசில் பயணம்

DIN

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 13,14-ஆம் தேதிகளில் பிரேசிலுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு பிரேசிலில் வரும் 13,14-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இப்போது கூட்டமைப்பின் தலைவராக பிரேசில் உள்ளதால் அந்த நாட்டில் மாநாடு நடத்தப்படுகிறது.

இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக (பொருளாதார ஒத்துழைப்பு) செயலா் டி.எஸ்.திருமூா்த்தி கூறுகையில், ‘பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் தலைவா்கள் விவாதிக்க இருக்கின்றனா். இதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 13 ஆம் தேதி பிரேசிலுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்’ என்றாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளில் உலக மக்கள்தொகையில் பாதியளவு மக்கள் வசிக்கின்றனா். எனவே, பிரிக்ஸ் மாநாடு சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT