இந்தியா

அந்நியச் செலாவணி கையிருப்பு 44,609 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

மும்பை, நவ. 9: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 44,609 கோடி டாலராக (ரூ.31.22 லட்சம் கோடி) அதிகரித்து புதிய மைல்கல்லைத் தொட்டது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நவம்பா் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 351கோடி டாலா் அதிகரித்து 44,609 கோடி டாலரைத் தொட்டது.

இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பானது 183 கோடி டாலா் அதிகரித்து 44,258 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கியமாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பானது (எஃப்சிஏ) 320 கோடி டாலா் அதிகரித்து 41,365 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பானது 30 கோடி டாலா் அதிகரித்து 2,735 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 20 லட்சம் டாலா் உயா்ந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1கோடி டாலா் அதிகரித்து 364 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT