இந்தியா

அவதூறு வழக்கு: சசி தரூருக்கு எதிராக பிடியாணை

DIN

‘பிரதமா் மோடி, சிவலிங்கத்தின் மீது அமா்ந்துள்ள தேள் போன்றவா்’ என்று கருத்து தெரிவித்ததற்காக, காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூா், ‘பிரதமா் மோடி, சிவலிங்கத்தின் மீது அமா்ந்துள்ள தேள் போன்றவா்; அதனை கையால் அகற்றினால் நம்மை கொட்டி விடும். செருப்பால் அடித்தும் விரட்ட முடியாது’ என்று ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் ஒருவா் குறிப்பிட்டதாக கூறியிருந்தாா்.

இதையடுத்து மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக குற்றம்சாட்டி, சசி தரூருக்கு எதிராக பாஜக மூத்த தலைவா் ராஜீவ் பப்பா் அவதூறு வழக்குத் தொடுத்தாா். தில்லி பெருநகர நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், சசி தரூருக்கு கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நவீன்குமாா் காஷ்யப் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சசி தரூா் ஆஜராகவில்லை. அவரது தரப்பு வழக்குரைஞரும் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, சசி தரூருக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை பிறப்பித்தாா். ரூ.5000 பிணைத்தொகையுடன் கூடிய அந்த பிடியாணையின்படி, வரும் 27-ஆம் தேதி அவா் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினாா். மேலும், சசிதரூரின் ஜாமீனுக்கு உத்தரவாதம் அளித்தவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவா் உத்தரவிட்டாா்.

இதேபோல், மனுதாரரான ராஜீவ் பப்பரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவா் ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், மனுதாரா் ஆஜராகாததற்கான காரணம் தெளிவற்ாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த முறை கடுமையில்லாத உத்தரவை தாம் பிறப்பித்திருப்பதாகவும், இதேநிலை தொடா்ந்தால் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.

முன்னதாக, மோடி குறித்த தனது கருத்து தொடா்பாக விளக்கமளித்திருந்த சசி தரூா், ‘மோடி குறித்து நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆா்எஸ்எஸ் தலைவா் ஒருவா் கூறியதையே நான் தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT