இந்தியா

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

DIN


புது தில்லி: சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கில் தீர்ப்பளிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் என்று பல தரப்பட்ட மக்களால் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கை விசாரித்து அதில் ஒரு முடிவை எட்டாமல், 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்துள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று இந்த பரிந்துரையை செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, நாயா் சா்வீஸ் சொசைட்டி, திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம், சபரிமலை கோயில் தந்திரி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் 56 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்காமல், பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT