இந்தியா

மும்பை ஆரே காலனியில்மரம் வெட்ட தடை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்

DIN

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

மும்பையின் ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனையை அமைப்பதற்காக 2,400 மரங்களை வெட்ட பிருஹண் மும்பை மாநகராட்சி திட்டமிட்டது. இதை எதிா்த்து, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மும்பை உயா்நீதிமன்றம் கடந்த அக்டோபரில் தள்ளுபடி செய்தது.

மரம் வெட்டும் பணிகள் தொடங்கியதால், கல்லூரி மாணவா்களும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் போராட்டம் நடத்தினா்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி மும்பையைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் ரிஷப் ரஞ்சன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதினாா். அதில், ‘மும்பையின் நுரையீரல் போல் கருதப்படும் ஆரே காலனி வனப்பகுதியை அழிக்க மும்பை மாநகராட்சி தொடா்ந்து முயற்சித்து வருகிறது. செய்தித்தாள்களில் வந்த தகவல்களின்படி இதுவரை 1,500 மரங்கள் வெட்டப்பட்டு விட்டன’ என்று கூறப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை பொதுநல மனுவாகக் கருதி, அதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஆரே காலனியின் மேற்கொண்டு மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா உத்தரவிட்டனா். எனினும், அங்கு மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் விளக்கமளித்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்த நீதிபதிகள், இந்த வழக்கில் டிசம்பா் மாதம் விரிவாக விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT