இந்தியா

பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது: சிவசேனையின் சாம்னா விமர்சனம்

DIN

மகாராஷ்டிரத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக சிவசேனையின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு, முதல்வர் பதவி உள்ளிட்ட காரணங்களால் பாஜக, சிவசேனை கூட்டணி தேர்தலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. மேலும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் சிவசேனை ஈடுபட்டு வருகிறது.

முதலில் ஆளுநர் அழைத்தபோது போதிய பலமில்லை எனக்கூறி ஆட்சியமைக்க மறுத்த பாஜக, தற்போது ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பயன்படுத்தி பாஜக குதிரை பேரம் நடத்தி வருகிறது. ஏனென்றால் சிவசேனை அமைக்கவுள்ள கூட்டணி இங்கு பலருக்கு கடுமையான வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஆட்சியமைக்க முடியாது என மறுத்தவர்களால், தற்போது எப்படி ஆட்சியமைக்க உரிமை கோர முடியும். வெளிப்படையாக ஆட்சியமைப்பேன் என சூளுரைத்தவர்களின் போலி முகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT