இந்தியா

கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

DIN

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதில்,  இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், கோத்தபய ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு எனது வாழ்த்துகள். இந்தியா, இலங்கை இடையிலான நல்லுறவு, அமைதி, வளம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT