இந்தியா

மேலதிகாரிகளை 'பாய்' என்று அழைக்கக்கூடாது: ஒடிசா அரசு முக்கிய அறிவுறுத்தல்!

அரசுப் பணியிடத்தில் மேலதிகாரிகளை 'பாய்' என்று அழைக்கக்கூடாது என்று இளம் மற்றும் கீழ் அலுவலர்களுக்கு ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. 

Muthumari

அரசுப் பணியிடத்தில் மேலதிகாரிகளை 'பாய்' என்று அழைக்கக்கூடாது என்று இளம் மற்றும் கீழ் அலுவலர்களுக்கு ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. 

அரசு அலுவலங்களில் மூத்த அதிகாரிகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, ஒடிசா அரசு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்களில் மூத்த அதிகாரிகளை இளம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், 'பாய்' (இந்தியில் 'மூத்த சகோதரர்' என்று பொருள்) என்று அழைக்கக்கூடாது எனக் கூறியுள்ளது. 

அவ்வாறு கூறி, மூத்த அதிகாரிகள் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூத்த அதிகாரிகளை சிலர் 'பாய்' என்று அழைப்பதாக வந்த புகாரை அடுத்தே, அதனைத் தடுக்க இது தொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும், அரசு அலுவலக நேரங்களில் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அலுவலத்திற்குள் தனிப்பட்ட உறவுமுறைகளை சொல்லி அழைக்கக்கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT